CTS Mupperum Thiruvizha 2024

கனடா தமிழ்ச் சங்கத்தின் முப்பெரும் திருவிழா 2024 !

CLICK HERE FOR EVENT ALBUM

கனடா தமிழ்ச் சங்கத்தின் முப்பெரும் திருவிழா 2024 !

கனடா தமிழ்ச் சங்கத்தின் முப்பெரும் திருவிழா 2024 மிகவும் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜனவரி 28ம் தேதி காலை 10:30 மணிக்கு தொடங்கி மாலை 3:30 மணிவரை ஸ்ரீங்கேரி சமூக மன்றத்தில் மிகவும் பிரமாண்டமாக நடந்தேறியது. தமிழ் மரபு திங்கள், தை பொங்கல், ஆளுமை விருதுகளின் சங்கமம் போன்ற முன்று இணைத்து இந்த விழா முப்பெரும் திருவிழாவாக கொண்டாடியது சிறப்பு.

கனேடிய தேசிய கீதம், இந்திய தேசிய கீதம் மற்றும் தமிழ் தாய் வாழ்த்து பாடலுடன் நிகழ்வு ஆரம்பமானது. கனடா தமிழ்ச் சங்கத்தின் நிறுவனர் வள்ளிக்கண்ணன் மருதப்பன் தனது வரவேற்ப்பு உரையை ஆற்றி, 2013 சித்திரை 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்டு, அதே ஆண்டில் மே 20ம் தேதி ஐயன் வள்ளுவரை போற்றும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட கனடா தமிழ் சங்கத்தின் பயணம் இப்பொது சுமார் 200 நிகழ்வுகள் வரை வெற்றிகரமாக நடத்தியதையும் சுமார் 150க்கும் மேற்பட்ட தமிழ் ஆளுமைகள் கௌரவிக்க செய்யபட்டுயிருப்பதையும் இந்த விழா 10வது பொங்கலையும் கொண்டாடுவதையும் பெருமிதத்துடன் தனது உரையில் முழங்கினார்.

கரிகா குழுவினரின் பரதநாட்டியம், ஆசிரியை ஸ்ரீமதி. ரேணுகா விக்னேஸ்வரன் அவர்களின் கலைஅருவி அகாடமி ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ் மாணவர்களின் பரதநாட்டியம் நடனம், ரோஜா கூட்டத்தின் கோலிவுட் நடனம், சங்க பெண்கள், ஆண்கள், சிறுமி, சிறுவர்களின் கோலிவுட் நடனங்கள், இறுதியாக இந்தியாவில் இருந்து வந்த மிக பிரபலமான மாயாஜால வித்தகர் “மாஸ்டர் மேஜிசியன் SAC வசந்த்” நடத்திய மாஜிக் நிகழிச்சி என் அனைத்து நிகழ்வுகளும் மக்களின் ஆரவாரங்களுடன் சிறப்பாக நடைபெற்றது.

இடை இடையே இவ்விழாவில் சுமார் 14 ஆளுமைகளுக்கு விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

மூன்று சாதனையாளர்களுக்கு வடஅமெரிக்க தமிழ் வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கியது கனடா தமிழ் சங்கம். (1) மருத்துவர் சுதர்ஷன் தேவநேசன், மருத்துவம், சமூக சேவைக்கு வடஅமெரிக்க தமிழ் வாழ்நாள் சாதனையாளர் விருதும் (2) பேராசிரியர் கலாநிதி நாகராஜ ஐயர் சுப்பிரமணியன், தமிழ் இலக்கியம், தமிழாய்வு பணிக்காக வடஅமெரிக்க தமிழ் வாழ்நாள் சாதனையாளர் விருதும் (3) ஆர்.என்.லோகேந்திரலிங்கம், ஊடகப்பணிக்காக, வடஅமெரிக்க தமிழ் வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்பட்டது.

இதுபோல ஒன்பது சாதனையாளர்களுக்கு வடஅமெரிக்க தமிழ் மேன்மையாளர் விருதுகள் வழங்கியது கனடா தமிழ் சங்கம். (1) விஜய் மணிவேல், சமூக சேவைக்காக, வடஅமெரிக்க தமிழ் மேன்மையாளர் விருதும் (2) பொன்னையா விவேகானந்தன், தமிழ் கல்வியாளர் பணிக்காக வடஅமெரிக்க தமிழ் மேன்மையாளர் விருதும் (3) அகணி சுரேஸ், தமிழ் எழுத்தாளர், சமூகப்பணிக்காக வடஅமெரிக்க தமிழ் மேன்மையாளர் விருதும் (4) பரமநாதன் விக்னேஸ்வரன், ஊடகப்பணி, நாடகக்கலைக்காக வடஅமெரிக்க தமிழ் மேன்மையாளர் விருதும் (5) ஶ்ரீரஞ்சனி விஜேந்திரா, தமிழ் இலக்கியம், கல்வி, மொழிபெயர்ப்பாளர், வடஅமெரிக்க தமிழ் மேன்மையாளர் விருதும் (6) கிஷோர் சுப்ரமணியன், வணிகம், வழக்கறிஞர் பணிக்காக வடஅமெரிக்க தமிழ் மேன்மையாளர் விருதும் (7) ராகமாலிகா மோகன்ராஜ், பரதக் கலைக்காக வடஅமெரிக்க தமிழ் மேன்மையாளர் விருதும் (8) ஜோஷ்வா சுப்புராஜ், உடற்பயிற்சி பயிற்சியாளர் பணிக்காக வடஅமெரிக்க தமிழ் மேன்மையாளர் விருதும் மற்றும் (9) பிரகாஷ் வெங்கடராமன், தொழில், சமூகப்பணிக்காக வடஅமெரிக்க தமிழ் மேன்மையாளர் விருதும் வழங்கப்பட்டது.

இறுதியாக இரண்டு வடஅமெரிக்க தமிழ் இளம் சாதனையாளர் விருதுகள் வழங்கியது கனடா தமிழ்ச் சங்கம் (1) சின்மயி சிவகுமார், திரைப்பட, கர்நாடக இசைக்காக வடஅமெரிக்க தமிழ் இளம் சாதனையாளர் விருதும் (2) ப்ரத்னேஷ் பிரகாஷ், நடிப்பு, சிறந்த பொழுதுபோக்கு கலைக்காக வடஅமெரிக்க தமிழ் இளம் சாதனையாளர் விருதும் வழங்கப்பட்டது.

குறிப்பிடத்தக்க விருந்தினர்களாக இந்திய துணைத் தூதரக அதிகாரி மாண்புமிகு, மேதகு சித்தார்த்த நாத் அவர்கள், டொரொண்டோ கல்வி சபை உறுப்பினர் நீதான் ஷான், தமிழ் மிரர் ஆசிரியர் சார்லஸ் தேவசகாயம் மற்றும் கிருஷ்ணா டெலிகாஸ்ட் க்ரிஷ்ணலிங்கம், மருத்துவர் சொக்கலிங்கம், இந்தியாவில் இருந்த வந்திருந்த தொழிலதிபர் கா.விஜயன் என அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

விழா தொகுப்பாளர்களாக சுஹாசினி, துர்கா விஜயன் நிகழ்வுகளை மிகவும் நேர்த்தியாக கொண்டு சென்றது பாராட்டுக்குரியது. சங்கத்தின் தலைவர் ஜானகி மஹேஸ்வரி கமலக்கண்ணன், இயக்குனர்கள் பார்வதி வள்ளிக்கண்ணன், காயத்திரி ராஜசுப்ரமணி, அழகு வள்ளிக்கண்ணன் மற்றும் சங்கத்தின் தன்னார்வலர்கள் இவர்களுடைய ஒருங்கிணைப்பு சிறப்பாக அமைந்தது. இந்த விழாவில் கலந்து செய்திகளை மக்களுக்கு கொண்டு சென்ற ஊடக நண்பர்கள் உதயன் லோகேந்திரலிங்கம், தமிழ் மிரர் சார்லஸ், கிருஷ்ணா லைவ் டெலிகாஸ்ட் க்ரிஷ்ணலிங்கம் அவர்களுக்கு நன்றிகள். விழா ஆசாரணையாளர்கள் வள்ளிக்கண்ணன் மருதப்பன்-வீடு விற்பனை முகவர், செட்ரிக் செபஸ்டியன்-வாகனம், வீடு காப்புறுதி முகவர் இருவருக்கும் நன்றி.

இந்த திருவிழா கனடா தமிழ்ச் சங்கத்திற்கு மீண்டும் மகுடம் சூட்டும் விழாவாக அமைந்ததாக இருந்தது.

Share this article: